“குற்றம் புரிந்தால்”நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!
அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார்.

மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குனர் டிஸ்னி.

“குற்றம் புரிந்தால்” திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.