‘அயோத்தி’ பட இயக்குனரை பாராட்டிய மன்சூர் அலிகானின் “சரக்கு” படக் குழுவினர்!
மன்சூர் அலிகான் தயாரித்து, கதாநாயகனாக நடித்துவரும் படம் “சரக்கு”.
நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்… சரக்கு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால், சற்று தாமதமாக அயோத்தி படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். உலகமே கொண்டாடப் படவேண்டிய படம் அயோத்தி! திறமை வாய்ந்த நடிகரான சசிகுமாரை வைத்து, மூர்த்தி இயக்கியிருந்தார். தமிழ் நாட்டினர், தமிழர்கள் எவ்வளவு மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை நெஞ்சை தொடும் வகையில், இயக்குனர் மூர்த்தி எடுத்திருந்தார்.
