”ஆர்ட் மூலமாக ஒரு விஷயத்தை சொல்லும்போது அது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாம் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ படம் வாயிலாக பார்க்கமுடிகிறது. சிலர் படபடப்பாகிறார்கள், பயப்படுகிறார்கள், நீங்களெல்லாம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய விஷயங்களை ஆர்ட் சர்வசாதாரணமாக செய்கிறது என்று பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஆர்ட் மிகப்பெரிய வேலையை செய்து வருகிறது. ஆதிக்கம், அடிமை என்று சொல்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ஆதிக்கம், எதிர்ப்பு தான். எதிர்க்கவேண்டிய காலகட்டம் இது.
நம்முடைய எதிர்ப்பை எல்லா களங்களிலேயும், எல்லா தளங்களிலேயும், எல்லா மீடியத்திலேயும் சொல்லவேண்டிய கட்டாயத்திலும், தேவையிலேயும் நாம் இன்று இருக்கிறோம். அதன் அடிப்படையில் தற்போது நடத்தப்பட்ட ‘மஞ்சள்’ நாடகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பொது சமூகத்தினரை நோக்கி இது கண்டிப்பாக கேள்வி எழுப்பும் என்றும் நம்புகிறேன்” என்றார்.