தமிழ் சினிமாவில் தற்போது வசூல் நாயகனாக உருவெடுத்து வருபவர் தல அஜித். சமீப காலமாக வெளிவரும் இவரின் படங்கள் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அஜித்துக்கும் சினிமாவில் சோதனை காலம் ஒன்று உண்டு. ஒரு கட்டத்தில் தல அஜித் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் வெளிவந்த படம் தான் ஜி.
தல அஜித், வெங்கட் பிரபு, திரிஷா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். அந்த பட தோல்விக்கு முழுக்க முழுக்க லிங்குசாமி, தான் தான் காரணம் என ஏற்றுக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் கூறியதாவது, தனக்கும் அஜித்துக்கும் அந்த கதையில் உடன்பாடு இல்லை எனவும், தயாரிப்பாளர் சொன்னதால் மட்டுமே ஜி படத்தை இயக்கினேன் என குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜி படத்தில் இருவருமே அரை மனதுடன் தான் வேலை செய்தோம் எனவும் ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்காக தல அஜித் உடல் எடையை குறைக்க வேண்டி இருந்ததாலும், படப்பிடிப்பு நெருங்கியதால் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதும் படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
குறிப்பு:-
ஆரம்பத்தில் பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்த லிங்குசாமி தற்போது ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.