SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இப்போது அதன் பரந்த பிளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் மற்றொரு தலைசிறந்த படைப்பான RRR, “ஆர்ஆர்ஆர்” படத்தை இணைத்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் ஆலியா பட் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.