• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
November 30, 2025
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
IPL – விமர்சனம் 

டாக்ஸி ஓட்டுநரான குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்

அதே கட்சியின் முதல்வர் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன. இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.

ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் தப்பி பார்க்கிறார். அதற்கு அப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்க பார்க்கிறார்கள்

இதிலிருந்து தனது காதலியின் அண்ணனான குணசேகரனை டெலிவரி பாய் அன்பு எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

அன்பு என்கிற கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் பில்டப் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் மெசேஜ் அவரை பின்தொடர்பவர்களுக்கு கனெக்ட் ஆவதால் கரகோஷம் எழுகிறது. முதல் பாதிவரை வாசன் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு கிஷார்தான் அதிக காட்சிகளில் தோன்றுகிறார். முகபாவனைகளில் பெரிதாக நடிப்பை காட்டவில்லை என்றாலும் சண்டைக்காட்சிகளில் நம்பும்படி நடித்துள்ளார். குறிப்பாக, தன்னை பின்தொடர்பவர்களுக்கு காக கிளைமேக்சில் பைக் ரைடு ஸ்டண்ட் செய்துள்ளார் வாசன்.

மற்றபடி நடிக்க திணறுவது தெரிகிறது. கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார்

ஆனால், அவர் போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் எல்லாம் விசாரணை படத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது தொய்வாக உணர வைக்கிறது. நரேன் முதல்வராக மிரட்ட, ஜான் விஜய் ஒன்றிரண்டு இடங்களில் வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். என்றாலும் படத்தில் பல லாஜிக் மீறல்கள். மதுரையில் லாக்அப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? வாசன் சாதாரண டெலிவரி பாயாகத்தான் அறிமுகமாகிறார்.

ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன் , எப்படி என்று விளக்கவில்லை. ஹரிஷ் போன் செய்யாமலேயே போனில் பேசுகிறார். அது அப்படமாக கேமராவில் தெரிகிறது. இதுபோல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். ஒரு நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பல்கள்.

தேர்ந்த நடிகர்களின் நடிப்பே படத்தை காப்பாற்றுகிறது. முதல் பாடல் அருமை. பின்னணி இசை ஓகே. படம் முடிந்த பின் லாக்அப் சித்ரவதையால் இறந்தவர்களை காட்டிய இயக்குநரை பாராட்டலாம். டிடிஎப் வாசனுக்கு இப்படம் நல்ல அறிமுகம்தான்.

இயக்குனர் எடுத்த கதை களத்தை வெற்றி படமாக்கியதற்கு அவருக்கு பாராட்டுக்கள்..

மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை
Previous Post

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

Next Post

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

Next Post

'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

Popular News

  • யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா.

    0 shares
    Share 0 Tweet 0
  • IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.