புதையலில் கிடைத்த புத்தர் சிலை, ரஜினிகாந்திடம் ஒப்படைப்பு ..!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, குமரசிருளப்பாக்கத்தில், புதிய பள்ளி கட்டடத்திற்கான கட்டுமான பணி நடந்தபோது, 2 அடி உயர புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்து, கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக தனது நண்பர்களுடன் உறவினர்களுடனும் புத்தர் சிலையை ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டாகியது .இந்த தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறி கூட்டத்தை கலைத்தனர்.
இதுகுறித்த தகவலின்படி, வருவாய்த் துறையினர் அங்கு சென்று புத்தர் சிலையை மீட்டு, பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்திடம் ஒப்படைத்தனர்.