தற்கொலை செய்து கொள்ள கூட துணிவில்லாத ஒரு எழுத்தாளர் காரில் பயணம் செய்யும் பொழுது கண்ணில் துணியை கட்டிக்கொண்டு சாக முயற்சிக்கிறார்.இப்படி தான் ஆரம்பமாகிறது படத்தின் கதை.
வெளிச்சம் என்கிற நாவல் மூலமாக பிரபலம் அடைந்த இந்திரன் என்கிற எழுத்தாளர் தன் நாவல்களால் பலரின் பாராட்டைப் பெற்று புகழ்ச்சி பிடிக்கவில்லை என்று நாவல் எழுத வெளியூருக்கு புறப்படுகிறார் அங்கே தான் ஆரம்பமாகிறது கதை.
அந்த நட்பு நாளடைவில் இவர்களுக்குள் நல்ல உறவை நட்பு பலப்படுத்துகிறது.
பிறகு தான் புதிதாக எழுது நாவலை இந்த பார்வையற்ற பெண்ணை வைத்தே எழுதலாம் என்று நாவலை எழுத ஆரம்பிக்கும் இந்திரனுக்கு பெற்றோர்களை இழந்து தவிக்கும் இந்த பார்வையற்ற பெண்ணை எப்படியாவது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்பு அதிகமாகிறது.
இந்தப் பார்வையற்ற பெண்ணின் பெற்றோர்களை கண்டுபிடித்தார் தாயை இழந்து நிற்கும் இந்திரனுக்கும் அந்த பார்வையற்ற பெண்ணிற்கும் என்ன உறவு என்பதை உடைக்கிறார் இயக்குனர்.
மிக சின்ன பட்ஜெட்டில் மிக அழகாக கவிதையாக இந்த கதையை சொன்ன இயக்குனருக்கு முதலில் ஒரு வாழ்த்துக்கள்.
அவர் வேதனைப்படும் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் மிளிர்கிறார்.
பத்திரிகையாளராக வரும் பெண் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி நிஜ பத்திரிக்கையாளராகவே ஆகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.