முத்துமலை முருகன் கோவிலில் “பகாசூரன்” புதிய பட பூஜை..!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுளார்.

இந்த படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு திங்கள் முதல் நடைபெற உள்ளது.செல்வராகவன், நட்டி இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.