இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga ஆர்வமுள்ள இசை கலைஞர்களுக்கான வாயிலைத் திறக்கிறது
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசை ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாத வகையில் அவரது திரைப்படங்கள், இசை ஆர்வலர்களுக்கு எவர்க்ரீன் கிளாசிக் பாடல்களைப் பரிசளித்துள்ளன. அவரது ‘Ondraga’ யூடியூப் சேனலில் வெளியான சுயாதீன பாடல்கள் ஒரே இரவில் சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன. தற்போது, அந்த சேனல் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மற்றும் சுயாதீன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ‘For the Love of Music’ (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டர் இப்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவை இது திறக்கிறது. மேலும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த இசை ட்ராக்ஸ் அவர்களின் சேனலில் இடம்பெறும். அவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும்.
இசையமைப்பாளர்கள் மற்றும் சுயாதீன இசைக் கலைஞர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குநர்களில் கெளதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இசைஞானி இளையராஜா, ஆஸ்கர் விருது வென்ற
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பெரிய இசை ஆளுமைகளுடன் பணிபுரிந்த அவர், தர்புகா சிவாவுடன் இணைந்து ‘மிஸ்டர். எக்ஸ்’ என்ற ஒரு சார்ட்பஸ்டர் ஆல்பத்தை கொடுத்துள்ளார்.
எனவே இப்போது, “Looking for next Mr. X” என்ற டேக்லைன் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மத்தியில் தற்போது சென்சேஷனாகி உள்ளது. Ondraga மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் அடுத்த திறமை வாய்ந்த இசைக்கலைஞர் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.