அஸ்வின்ஸ் – விமர்சனம்
லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்றில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.
கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விடுகிறது அவரது சடலம் எப்படி மாயமானது எங்கிருக்கிறது என்பதை புரியாத புதிராக இருப்பதோடு அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் இருப்பதாக கதை நகர்கிறது.
இப்படிப்பட்ட பங்களாவையும் அதன் முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள்
புராணத்தில் உள்ள அஸ்வின் கடவுள் பற்றிய சிறு கதையை மையமாக எடுத்துக்கொண்டு மிரட்டும் வகையிலான திகில் திரைக்கதையை ரசிகர்கள் காட்சிக்கு காட்சி மிரட்சி அடையும் வகையில் சொல்லியிருக்கிறது அஸ்வின்ஸ் திரைப்படம்
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.
அவருடைய ஒவ்வொரு அசைவும் பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது
வசனம் அதிகம் இல்லை என்றாலும் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் வசந்த் ரவி படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக், ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தரமாக செய்திருக்கிறார்கள்.
பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல் படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன் தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்
இறுதிக் காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பை எகிற வைத்துவிடுகிறார்.
வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான புது விதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் திகில் காட்சிகளும் பின்னணி இசையும் மிரட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும் மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டிருக்கிறார்.
அஸ்வினர்கள் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தருண் தேஜா இரண்டு மணி நேரம் நமது மூளையை தன் வசப்படுத்திக் கொண்டு படத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார்
மொத்தத்தில், இந்த ‘ அஸ்வின்ஸ் ’ தொழில்நுட்ப ரீதியாக சொல்லியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு இதுவரை பார்த்திராத ஒரு திகில் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்..
மொத்தத்தில் இந்த அஸ்வின்ஸ் படத்தில் நமக்கு இருந்த ஒரே ஆறுதல் வசந்த் ரவி.படத்துக்கு படம் மெருகேற்றிக்கொண்டே போகிறார்.