குட் நைட்- விமர்சனம்
ஐடி-யில் பணியாற்றும் மோகனுக்கு (மணிகண்டன்), குறட்டைதீராத பிரச்சினையாக இருக்கிறது. இதனால், காதலும் கைவிட்டுப் போகிறது. மோகனின் அக்கா (ரேச்செல் ரெபெக்கா) கணவர், ரமேஷ் (ரமேஷ் திலக்), வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியைப் பொருத்தும் வேலை பார்க்கிறார்.
அப்படி அவர் செல்லும் வீட்டின் மாடியில் பெற்றோரை இழந்த அனு(மீதா ரகுநாத்), தனியாக வசிக்கிறார். ரமேஷுடன் அந்த வீட்டுக்குச் செல்லும் மோகனும் அனுவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மோகனின் குறட்டையால் தூக்கம் இழக்கும் அனுவுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. குற்ற உணர்வால், தனது குறட்டை சரியாகும் வரை தனி அறையில் தூங்குகிறார் மோகன் . இதையடுத்து நடக்கும் விஷயங்கள் இருவர்உறவிலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. இறுதியில் குறட்டைப் பிரச்சினை தீர்ந்ததா? இருவரும் திருமண வாழ்வை நிம்மதியாகத் தொடர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். குறட்டைதான் மையம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் குடும்பம், நாயகிக்கென தனித்துவப் பின்னணி, அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்சினைகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
நாயகனின் அம்மா, அக்கா, அக்கா கணவர், நாயகியை அரவணைக்கும் தாத்தா – பாட்டியாக இருக்கும் வீட்டுஉரிமையாளர்கள் என அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும் முழுமையுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நாயகனுக்கும் அவர் அக்கா கணவருக்குமான நட்பும் கிண்டலும் கலந்த உறவு, ரசிக்க வைக்கிறது.