• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது ! 

by Tamil2daynews
February 13, 2020
in சினிமா செய்திகள்
0
ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது ! 
0
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருமணங்கள் நடந்தேறும் காலங்கள்  அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும். எல்லை தாண்டி சந்தோஷ கூச்சல்கள் கேட்கும்.  திருமண சங்கீதங்கள் எங்கும் ஒலிக்கும். குடும்பத்தில் எல்லோரும் இணையும் திருமணம் அத்தனை மகிழ்ச்சியானதாய் இருக்கும். நாம் இங்கு பேசுவது திருமணத்தை பற்றி அல்ல. திருமணத்தை மையமாக வைத்து காதலை கொண்டாடிய “பெல்லி சூப்புலு” தெலுங்கு படத்தின் தமிழ்பதிப்பை பற்றி. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கை போடு போட்ட “பெல்லி சூப்புலு” திரைப்படம் நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் உருவாகிவருகிறது. தமிழில் படப்பிடிப்பு  ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றாக முடிக்கப்பட்டு,  தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.


தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா படம் பற்றி கூறியதாவது…
தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. 2020 பிப்ரவரி 7 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் வெகு நிறைவான படைப்பாக படம் உருவாகி வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார். பின்வரும் காலங்களில் அவர் தயாரிப்பாளர்களின் செல்வமாக விளங்குவார். மிகப்பெரும் வெற்றியடைந்து, எல்லைகள் தாண்டி பேசப்பட்ட ஒரு படத்தை, ரீமேக் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் கலாச்சாரத்துடன் தமிழ் மொழியின் தன்மை மாறமல், வாழ்வியல் தன்மைகள் வெளிப்பபடும்படி திரைக்கதை அமைக்க பெரும் திறமை வேண்டும். அதில் அவர் வித்தகராக இருக்கிறார். இப்படம் கதாப்பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மையமாக கொண்ட படம். அசல் பதிப்பின்  ஆத்மா எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் ஹரிஷ் கல்யாணும், ப்ரியா பவானி சங்கரும் தங்கள் கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக உயிர்ப்பித்துள்ளார்கள். எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகள் பெரிய உற்சாகத்தை தந்தது. படத்தை முழுதாக பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்றார்.


A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொரேனா சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை  SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். 2020 கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tags: “Pelli Choopulu”Harish KalyanPriya Bhavani Shankar
Previous Post

கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி – லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை”

Next Post

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்

Next Post
மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்

Popular News

  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • ’கஜானா’ படம் போல் தமிழ் சினிமாவில் அட்வெஞ்சர் படம் வந்ததில்லை – நடிகை வேதிகா உறுதி

    0 shares
    Share 0 Tweet 0
  • நாங்கள் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்கிறார்: பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

November 10, 2025

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!

November 10, 2025

நிஜம் சினிமா தனது முதல் தயாரிப்பில் வெள்ளகுதிர

November 10, 2025
சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

November 8, 2025

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு

November 8, 2025

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்

November 8, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.