இசைஞானியின் இசையில் பள்ளி பருவ காதலை சொல்லும் ‘நினைவெல்லாம் நீயடா’..!
இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.
முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, சிம்பு நடித்த “மாநாடு” படத்தை தயாரித்த பட அதிபர் சுரேஷ் காமாட்சி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“நினைவெல்லாம் நீயடா’ இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி” என்று தெரிவித்தார் இயக்குநர் ஆதிராஜன்.
