ரசிகர்கள் உற்சாகத்தை கூட்டவும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்கவும் வந்து விட்டது. ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன், ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதி பாகமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய திரையில் இந்த காவிய அனுபவத்தை ரசிகர்கள் ரசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதை அறிந்ததும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூன் 10ஆம் தேதி கிறிஸ் பிராட் நடித்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் நாளுக்காக, நாட்களை எண்ணிக்கொண்டிக்கின்றனர் . படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது.


இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 10ஆம் தேதி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 3D, IMAX 3D, 4DX & 2D-ல் இப்படம் வெளியாகிறது.