‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின..!
கௌதம் கார்த்திக்-சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. இதனை அடுத்து, நேற்று பூஜையுடன் டப்பிங் பணிகள் துவங்கியது.


இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.