“குற்றம் புரிந்தால்” படத்தின் முதல் பாடலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராம நாராயணன் வெளியிட்டார்!
அவரது அலுவலகத்தில் எளிமையாக நடந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் விஜயகாந்த் சுப்பையா, இயக்குனர் வீரா, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!
அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில், ஆத்தூர் ஆறுமுகம் தயாரிக்கும் “குற்றம் புரிந்தால்” படத்தை, நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார்.

“குற்றம் புரிந்தால்” திரைப்படம் பிப்ரவரி மாதம் 24’ம் தேதி திரைக்கு வருகிறது.