ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும், ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் !!

by Tamil2daynews
September 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும், ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள் !!

 

முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார்.   தனது கதாப்பாத்திரங்களுக்காக அவர்  மேற்கொள்ளும் முயற்சிகள்  அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு   மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘கேப்டன்’  டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும்  பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் ஆர்யா ஒரு பெரிய வேற்றுகிரக உயிரினத்தை எதிர்கொள்ளும், இறுதி ஷாட் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

சவாலான அதிரடி ஆக்சன்  காட்சிகளை படமாக்கிய அனுபவத்தை நடிகர் ஆர்யா அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது..,

இப்படம் மிக புதுமையானதாக இருக்கும்எனது கதாபாத்திரத்திற்கும் 120 அடி வேற்றுகிரக உயிரினத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஆக்‌ஷன் காட்சி இதில் உள்ளது. அந்த காட்சியை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியை மூணாறில் எடுக்க முடிவு செய்திருப்பதாக சக்தி என்னிடம் தெரிவித்தபோது, குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதம் என்பதால் என்னால் அதை  முழுமையாக செய்ய முடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. மழை காலத்தில் அதிரடி காட்சியை படமாக்குவது மிகவும் சவாலானதாக மாறியது. அந்த காட்சியில் நான் கிரேன் மூலம் 20 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டேன் அந்த உயரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு, அந்த காட்சியை  எடுக்கும் பணி பயங்கரமானதாக இருந்தது.  ஒருவழியாக எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தபோது, ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் இன்னொரு  காட்சியை படமாக்க வேண்டும் என்று சக்தி மீண்டும் என்னிடம் கூறினார். அப்போது மிகவும் குளிர்காலம். குளிரில் படப்பிடிப்பு முற்றிலும் கடினமாக இருந்தது. படம் முழுக்கவே அனைவரும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளனர். டிரெய்லர் எல்லோரையும் கவர்ந்திருப்பதும் பல பக்கங்களிலிருந்து வரும் பாராட்டுக்களும் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும்.
செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் “கேப்டன்” படத்தினை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ்), தீபாலி நூர் (ஆடை வடிவமைப்பு), S மூர்த்தி (ஸ்டில்ஸ்) , NXgen (VFX), V அருண் ராஜ் (VFX மேற்பார்வையாளர்), Igene (DI), சிவசங்கர் V (வண்ணக்கலைஞர்), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), அருண் சீனு (ஒலி வடிவமைப்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), S சிவக்குமார் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் ), K. மதன் (நிர்வாகத் தயாரிப்பாளர்),  ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சற்குணம்

Next Post

2 நிமிடங்களிலேயே இப்படத்தை எடுக்கலாம்! லைகா சுபாஸ்கரன் கூறிவிட்டார்; கமல் சார் படத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்! – இயக்குநர் மணி ரத்னம்

Next Post

2 நிமிடங்களிலேயே இப்படத்தை எடுக்கலாம்! லைகா சுபாஸ்கரன் கூறிவிட்டார்; கமல் சார் படத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்! - இயக்குநர் மணி ரத்னம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!