‘மாவீரன்’ – விமர்சனம்
மண்டேலா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

பிரின்ஸ் பட தோல்விக்குப் பின் நம்ம வீட்டுப்பிள்ளையாக கலகலப்பாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயன் நம்மை கவர்கிறார்.தின தீ பத்திரிக்கையில் கார்ட்டூன் ஓவியராக வரும் சிவகார்த்திகேயனின் அப்பாவியான நடிப்பு அனைவரையும் கவரும்.
ஒரு சில காட்சிகளில் இயக்குனர் மிஷ்கின் தனது கண்களாலேயே படம் பார்ப்பவரை மிரட்டுவது நிச்சயம்.
வரும் அத்தனை காட்சிகளிலுமே கைதட்டல் தான்.யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் செய்திருக்கிறது.
அடுத்தபடி சரிதா அந்த குடிசை வாழ் பெண் போலவே காட்சியளிக்கிறார் நீண்ட நாட்களுக்குப் பிறகு சரிதாவை திரையில் பார்த்த மகிழ்ச்சி.
அதிதி ஷங்கர் இரண்டாவது படத்தில் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இவருக்கு தமிழ் சினிமா உலகில் நல்ல எதிர்காலம் உண்டு.

அந்த அழுத்தத்தை கொஞ்சம் நகைச்சுவையாகவும், கொஞ்சம் சீரியஸ் ஆகவும் பேசி இருக்கிறார் என்றே சொல்லலாம்.
இதிலும் வாக்களித்த மக்கள் அனைவரும் இலவசமாக பெரும் வீட்டை வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கிறார் மடோன் அஸ்வின்.
முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சற்று விறுவிறுப்பு குறைவு என்றாலும் சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறும் ஒவ்வொரு காட்சியும் மிக அற்புதமாக இருக்கின்றது.
படத்தில் பின்னனியில் ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் படத்தை இன்னும் சுவாரசியம் ஆக்குகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டியே ஆக வேண்டும்.படத்தின் பல காட்சிகளில் கேமரா அண்ணாந்து பார்க்கும் காட்சிகளில் நம்மையும் அண்ணாந்து பார்க்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வாழ்த்துக்கள்.
சிவகார்த்திகேயனின் அப்பாவியான நடிப்பு நம்மை கவர்வது நிஜம்.
படம் பார்த்த பின்பு ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான ரமணா,அந்நியன், போன்ற திரைப்படங்களின் ஞாபகம் வந்தாலும் இந்த மாவீரன் இதிலிருந்து சற்று மாறுபட்டு தெரிகிறான்.
பெண்களையும் குழந்தைகளையும் நிச்சயமாக இந்த படம் பெரிதும் கவரும்.