“மஹா” விமர்சனம்
ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான மஹா திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ளது.

காதலால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் நடிகை ஹன்சிகா இந்த விஷயத்தை விமானத்தில் பைலைட்டாக வேலை பார்க்கும் தன் கணவர் சிம்புவிடம் தெரிவிக்க வேண்டும் என்று காத்திருக்க அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.
பிறகு குழந்தையுடன் தனியாக வாழும் ஹன்சிகாவிற்கு சைக்கோ கொலைகாரன் மூலம் வருகிறது வினை. தனது ஆசை குழந்தையை பறிகொடுக்கிறார் ஹன்சிகா.
தன் காதல் கணவர் சிம்புவுக்கு என்ன ஆனது, தனது குழந்தைக்கு நேர்ந்த கதி என்ன என்பதை தனது திரக்கதையின் மூலம் அனைவரையும் பரபரப்பாக படம் பார்க்க வைக்கிறார் இயக்குனர்.
படத்தின் முதல் காட்சிலேயே ஹன்சிகாவுடன் ரொமான்ஸில் வரும் சிம்புவிடம் வம்பிளுக்கும் போதை ஆசாமிகளை பின்னி எடுக்கும் அந்த சண்டை காட்சி படத்திற்கு ஒரு பலம் தான்.

அடுத்து நம்ம ஹன்சிகா மோத்வானி இவர எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருந்தாலும் பல வெற்றி படங்கள்ல கதாநாயகியாக நடிச்சிருந்தாலும் இது இவர் தனது 50ஆவது திரைப்படத்திற்கு தேர்ந்தெடுத்த கதைதான் இவருடைய திரையுலக வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையா அமைஞ்சிருக்கு.இந்த மஹா திரைப்படம் மூலம்.
அதுவும் அவர் அழுகின்ற காட்சிகளில் ஐயோ பாவம் என்றே நம் மனதை பதபதக்க வைக்கிறார்.
ஆனால் அந்த குழந்தையின் முடிவு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இயக்குனரே சற்று கருணை காட்டி இருக்கலாம்.
கதையில் ஆங்காங்கே வரும் சில எதிர்பாராத காட்சிகளால் படம் கொஞ்சம் வேகமும் எடுக்கிறது ஒரு சில காட்சிகள் சிலருக்கு புரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இதை இயக்குனர் சற்று ஆழ்ந்து யோசித்து எடுத்து இருக்கலாம்.

மேலும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் போன்றவர்களும் தனது கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசை காதல் பாடல்களிலும் பின்னணி இசைகளும் அவர் வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

என்னுடைய அக்கறை பதிவு :
படத்தில் காதல் ஜோடிகளாக வரும் சிம்புவும் ஹன்சிகாவும் உண்மையில் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.ஒருவேளை இதுவரை அவர்கள் இருவரும் ஒன்றாக நிஜத்திலும் காதலித்துக் கொண்டிருந்தாள்..!
இதே போலத்தான் பல வருடங்களுக்கு முன்பு இன்னொரு நடிகைக்கும் சொன்ன மாதிரியே இருக்கு…… கேட்கவே சூப்பரா இருக்கு இல்ல.