தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
தற்போது மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தால் மட்டும் தான் சொன்ன மாதிரி இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வந்துவிடும். இல்லை என்றால் காத்திருக்க வேண்டியது தான்.
மாஸ்டர் படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட துரைராஜ் என்று விஜய் பயன்படுத்தும் ஐடி கார்ட் ஒன்று சோசியல் மீடியாவை வைரலாகி வந்தது. மேலும், இப்படத்தில் பல இளைஞர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்து உள்ளார்கள். அதோடு இப்படத்தில் நிறைய கேங் உள்ளதாகவும், அதில் ஒரு கேங்கில் இருப்பவர் தான் பிரவீன்குமார். இந்நிலையில் நடிகர் பிரவின் குமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். நான் விஜய் சார் உடன் சண்டை போடும் காட்சி ஒன்றில் நடித்து உள்ளேன். இந்த சண்டைக்காட்சி சென்னை மெட்ரோ ரயிலை நடந்தது. இந்த சண்டைக்காட்சி மட்டும் மூன்று மணி நேரம் சென்னை மெட்ரோ ரயிலில் நடந்தது. சென்னை மெட்ரோ ரயிலிலை வாடகைக்கு எடுத்து நடத்தினார்கள். இது தான் இந்த படத்தின் முதல் சண்டைக்காட்சி. விஜய் சார் இதுவரை மெட்ரோவில் சென்றதே இல்லையாம்.
இந்த படத்தின் சண்டைக் காட்சியின் போது தான் முதன் முதலாக இவர் சென்னை மெட்ரோ ரயிலில் சென்றார். படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அவர்கள் குழந்தைபோல மெட்ரோ ரயிலில் நடந்து சென்றது செம்ம அழகாக இருந்தது. மெட்ரோ ரயில் 3 மணி நேரத்திற்கு சென்னை முழுவதும் சுத்தியது. அப்போது விஜய் சார் சென்னையின் அழகை ரசித்து பார்த்தார். சென்னை ரொம்ப அழகா தெரியுது என்றெல்லாம் சொன்னார் என்று பிரவின் குமார் கூறினார்.
சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய அனுபவங்களை கூறினார்கள்.