ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘மெமரீஸ்’ – விமர்சனம்

by Tamil2daynews
March 12, 2023
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மெமரீஸ்’ – விமர்சனம்

ஜீவி, எட்டு தோட்டாக்கள், C/O காதல் போன்ற ரசிகர்களிடம் கவனம் பெற்ற படங்களைக் கொடுத்த வளர்ந்து வரும் நடிகர் வெற்றி தற்பொழுது சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான மெமரீஸ் படம் மூலம் களத்தில் குதித்திருக்கிறார். முந்தைய படங்களைப் போல் சிக்கலான கதை அமைப்பைக் கொண்ட இந்த மெமரீஸ் திரைப்படம் வரவேற்பு பெற்றதா இல்லையா?Memories (2023) Tamil Psychological Thriller Movie Reviewமூன்று கொலைகள் செய்த ஒருவனை அவனை வைத்தே அக்கொலைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு வித்தியாசமான கதையைக் கொண்டு சைக்காலஜிக்கல் திரில்லராக வெளியாகி உள்ளது மெமரீஸ் திரைப்படம். ஒரு கதையாக பார்க்கும் பொழுது வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இது தென்பட்டாலும் திரைக்கதையாக பார்க்கும் பொழுது பல்வேறு குழப்பங்களுக்கு இடையே கதை நகர்ந்து கடைசி 15 நிமிடங்களில் பல்வேறு குழப்பங்களுக்கு பதில் கூறும் வகையில் படம் அமைந்துள்ளது. ஒரு சிம்பிளான கதையை சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி, கதைக்குள் பல்வேறு பிளாஷ்பேக்குகளை உள்ளடக்கி அதன் மூலம் பல முடிச்சுகளைப் போட்டு, அதை படத்தின் இறுதிக் கட்டத்தில் ஒவ்வொன்றாக அவிழ்த்து வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கின்றனர் இயக்குநர்கள் பிரவீன் & ஷ்யாம். அதேபோல் படம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்பாராத திருப்பங்களை வைத்து படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்துள்ளனர். இருந்தும் படம் முழுவதும் ஒரு குழப்பமான நிலை சுற்றி சுற்றி வருவதையும் தவிர்க்க முடியவில்லை. சில பல காட்சிகள் ரிப்பீட்டாக வருவது மட்டும் ஆங்காங்கே அயற்சியை கொடுத்துள்ளது.

Memories Movie Review: Memories, an experience we wish to erase from our memory

கவனிக்கத்தக்க வகையில் படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகர் வெற்றி இப்படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக் கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் பல்வேறு கெட்டப்புகள் ஒவ்வொரு கெட்டப்புகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகளை மற்றும் தனது உடல் மொழிகளை மாற்றி நடித்து கவனம் பெற்றுள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் டயானா, பார்வதி ஆகியோர். இவர்கள் இருவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசை சரியாக பயன்படுத்தி இருக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ரமேஷ் திலக் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். இவருடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் பேரோடி கதையின் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இவரின் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு உதவி புரிந்துள்ளது. மற்றும் ஆர்.என்.ஆர் மனோகர் உட்பட பலர் அவரவருக்கான வேலையை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.

Previous Post

பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில் “மூத்தகுடி” திரைப்படம் !!

Next Post

அகிலன் – விமர்சனம்

Next Post

அகிலன் - விமர்சனம்

Popular News

  • செங்களம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘தேன்’ திரைப்பட புகழ் நடிகர்  தருண் குமார் பெருமிதம்…

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0
  • பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செங்களம் – விமர்சனம்

March 25, 2023

N4 – விமர்சனம்

March 25, 2023

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

March 25, 2023

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

March 25, 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

March 25, 2023

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

March 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!