நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமானது
தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லி பாபு. ஹாரர் காமெடியில் கலக்கிய மரகத நாணயம் துவங்கி, எட்ஜ்-ஆஃப் சீட் சைக்கோ-த்ரில்லர் ராட்சசன், ரோம்-காம் ஓ மை கடவுளே, அழுத்தமான படைப்பான’பேச்சிலர்’ என முற்றிலும் வித்தியாசமான பல திரைப்படங்கள் தந்து, தயாரிப்பாளராக சிறப்பான ஒரு இடத்தை பெற்றுள்ளார்.
தற்போது அடுத்ததாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனிஷ்காந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் “மிடில் கிளாஸ்” திரைப்படத்தை துவக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை திரைப்பட இயக்குநர் ராம் குமார் (ராட்சசன் புகழ்) தனது குரலில் ‘ஆக்ஷன் கேமரா ரோல்’ கூறி முதல் ஷாட்டைத் தொடங்கி வைக்க, பேச்சிலர் புகழ் இயக்குநர் சதீஷ் கிளாப் போர்டு தட்டி இப்படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். நடிகர் முனிஷ்காந்தை முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. முனிஷ்காந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டது இனிமையான தருணமாக அமைந்திருந்தது.
இப்படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), MSP மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (எடிட்டிங்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்), SS.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு),J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (மேக்கப்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), KV துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகிறது.