ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

ஆளுநரிடம் அடிபணிவதா..! தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்…

by Tamil2daynews
October 27, 2021
in Uncategorized
0
ஆளுநரிடம் அடிபணிவதா..!  தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்…
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? – சீமான் கண்டனம்
தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்றறிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக அரசின் இச்செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இதற்கு ஐயா இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்றமளிக்கிறது. மதிப்புவாய்ந்த பெருந்தகைகள் இதுபோன்ற மதிப்பிழக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது.
ஆளுநர் பதவி என்பது அலங்காரப்பதவிதானே ஒழிய, அதிகாரம் செலுத்தும் நிர்வாகம் பதவியல்ல. மாநில ஆட்சியமைப்பு முறைகளில் தலையிட ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகார வரம்புகள் எதுவும்  இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் வரையறுக்கப்பட்டவில்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அமைச்சரவையின் நிர்வாகத்தின் ஆளுநர் தலையிட்டு, குறுக்கீடுசெய்து இடையூறு விளைத்திடுவது மக்களாட்சித்தத்துவத்தைக் குலைத்திடும் கொடுஞ்செயலாகும்.
ஏழு தமிழர் விடுதலைக்காக மாநில அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தரமறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை  ஆய்வுசெய்வதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும். பாஜக ஆளாத மாநிலங்களில் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதும், அரசமைப்பின் அதிகாரிகளோடு கலந்தாய்வுசெய்வதும், துறைச்செயலாளர்களின் நடவடிக்கைகளை ஆய்வுசெய்வதுமென ஆளுநர்கள் மூலமாகக் குடைச்சலைக் கொடுக்கும் பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
அதிமுக ஆட்சியில் ஆளுநரின் ஆய்வுக்கெதிராகப் போராடிய திமுக, தங்களது ஆட்சியில்  ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கை எதிர்க்கவே துணிவற்று, முழுமையாகப் பணிந்துபோவது மாநிலத் தன்னுரிமையைக் காவுகொடுக்கும் உரிமையிழப்பாகும். பாஜகவின் அடாவடித்தனத்தை எதிர்த்துச் சண்டையிடாது சமரசமடைந்த திமுகவின் அணுகுமுறை வெட்கக்கேடானது.
இதுதான் திமுக, பாஜகவை எதிர்க்கிற இலட்சணமா? இதுதான் ஆரியத்திற்கு எதிராக திராவிடம் செய்யும்சமரசமற்ற சமரா?  ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என முழங்கிய அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சியில் நடத்துவதாகக் கூறும் திமுக அரசு, அதற்கு மாறாக ஆளுநரின் முடிவுக்கு அடிபணிந்து மாநில உரிமையைப் பறிகொடுப்பது மிகப்பெரும் சனநாயகத்துரோகமாகும்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

‘Hoote’- India’s first voice-based social media platform for the World.

Next Post

சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்.

Next Post
சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்.

சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்.

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!