மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும் – நடிகர் கார்த்தி
பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள் இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அது இப்படத்திற்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வெளியூர் செல்லும் போது சோழர்களின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். மேலும், உங்களுடைய வாழ்த்துகள் எப்படி இருக்கும் என்று தெரியும். நேரில் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.