ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘அலா வைகுண்டபுரமுலு’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இந்த முறை தெலுங்கு பார்வையாளர்களுடன் உலக சினிமா பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் படமாக இது இருக்கும் என்றும் இந்த கூட்டணி உறுதியளிக்கிறது.
ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் மீண்டும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் அவர்களின் எட்டாவது பட தயாரிப்புக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான முந்தைய மூன்று படங்களையும் மிகப்பெரிய பொருட்செலவில் ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்போது, தயாரிப்பு மதிப்புகளை இன்னும் அதிகமாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பார்வையாளரையும் திருப்திப்படுத்த உலக அளவிலான தயாரிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.