ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கண்ணை நம்பாதே – விமர்சனம்

by Tamil2daynews
March 18, 2023
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கண்ணை நம்பாதே – விமர்சனம்

 

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவு ஒரு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். போதையில் இருக்கும் பிரசன்னா, உதயநிதிக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு பூமிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு பூமிகாவிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக பூமிகாவை கொலை செய்து விடுகிறார். மறுநாள் காலையில் காரில் பூமிகாவின் சடலத்தை பார்க்கும் உதயநிதி அதிர்ச்சி அடைகிறார். இந்த கொலை பழியை உதயநிதி மேல் போடும் பிரசன்னா, சடலத்தை மறைக்க உதயநிதிக்கு உதவி செய்கிறார். அப்போது மேலும் ஒரு விபத்தில் ஒருவர் இறக்க, இரண்டு சடலத்தை வைத்து எப்படி தப்பிக்க என்று பிரசன்னாவும், உதயநிதியும் திட்டம் போடுகிறார்கள்.கண்ணை நம்பாதே உதயநிதிக்கு வெற்றியா, தோல்வியா.? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் - Cinemapettai

மறுபக்கம் இவர்களின் திட்டத்தை தெரிந்துக் கொண்டு மர்ம நபர் மிரட்டுகிறார். இறுதியில் உதயநிதி, பிரசன்னா இருவரும் கொலை பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இவர்களை மிரட்டும் மர்ம நபர் யார்? மிரட்ட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ஒரு கொலை, அதை மறைக்க போராடும் இரண்டு நண்பர்கள், பிளாக்மெயில், மெடிக்கல் கிரைம் என திரில்லர் பாணியில் படமாக்கியுள்ளார் இயக்குனர் மு.மாறன். திரைக்கதையில் சில கேள்விகள் இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இறுதி காட்சி வரை டுவிஸ்ட் வைத்து இருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, செய்யாத குற்றத்திற்கு போராடும் இளைஞனாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். காதல், பரிதவிப்பு என கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

Kannai Nambathey' movie review: This convoluted thriller ends up being unintentionally funny - The Hindu

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் பிரசன்னா. அதுபோல் ஶ்ரீகாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார் பூமிகா. காதலியாக வரும் ஆத்மிகா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிரட்டும் வசுந்தரா, பயப்படும் சுபிக்ஷா ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதம். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

 

Previous Post

கப்ஜா – விமர்சனம்

Next Post

குடிமகான் – விமர்சனம்

Next Post

குடிமகான் - விமர்சனம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி – லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை”

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானியின் இசையில் பள்ளி பருவ காதலை சொல்லும் ‘நினைவெல்லாம் நீயடா’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமூகக்கருத்தை சொல்லும் திரில்லர் படம் கொடியன்.

    0 shares
    Share 0 Tweet 0
  • 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகை சிம்ரன், நடிகை லைலா கூட்டணி !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

March 21, 2023

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

March 21, 2023

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

March 21, 2023

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

March 21, 2023
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி  இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!