

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகளின் போன்களில் இருந்து ஆபாச படங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்நிலையில், போதைப்பொருள் விவகாரம் குறித்த தகவல்கள், ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணியின் செல்போன்களில் இருக்குமா என்பதை அறிய, இருவரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த போனிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை ரிக்கவரி செய்து போலீசார் ஆய்வு செய்ததாகவும் தெரிகிறது.


இதேல்லாம் நடிகையின் செல்போனில் இருப்பது சகஜம் தானே என்று மக்கள் முனுமுனுக்கின்றனர்