ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது…
இந்த கூட்டத்தில் கடைசியாக நிற்க வேண்டிய என்னை இன்று முதல் வரிசையில் உட்கார வைத்தவர் என்றால் அது தலைவர் ரஜினி தான்.
தன்னுடைய குடும்பத்தை கூட 2வது வரிசையில் தான் அமர வைத்துள்ளார்.
யார் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியைப்போல் தன்னடக்கம், அமைதி வராது.
அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? யாராவது 100வது படத்தில் ஆன்மீகத்தை சொல்வார்களா? தங்கள் 100வது படம் மாஸ் ஆக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் ராகவேந்திரா மூலம் சொன்னார்.
அற்புதம் அதிசயம் என்ற வார்த்தைகள் சாதாரணமானவை. ஆனால் அது ரஜினி சொன்ன பிறகுதான் அது பெரிதாக பேசப்படுகிறது.
அந்த அதிசயமே அற்புதமே ரஜினி சார்தான்.
ரஜினி பேசினால் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்; டேய் பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான்.
தற்போது ஒருவருக்கு அரசியல் நாகரீகம் என்பதே கிடையாது. ரஜினி ஒருவரை கூட தவறாக பேச மாட்டார்.
ஆனால் அவரை பற்றி ஒருவர் தவறாக எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார். அவரின் பெயரை கூட சொல்ல கூட எனக்கு தோனல.
நான் பதவிக்கு வந்தால் எல்லாரையும் கொன்றுவிடுவேன் என்கிறார். இதுதான் தலைமையா?
நான் இதுபற்றி பேச கூடாது என நினைத்தேன். ஆனால் இது சரியான நேரம். அதான் பேசுகிறேன்.
நான் தலைவர் வீட்டூக்கு அடிக்கடி போன் பண்ணி பேசுவேன். இதன்பின்னர் என்னிடம் தலைவர் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை.
என் தலைவன பத்தி பேசுனா நானும் பேசுவேன் என சீமானை சீண்டினார் லாரன்ஸ்.
மேலும் பேசியதாவது…
நான் சின்ன வயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்தீருக்கிறேன். அது அந்த வயசு. பிறகுதான் ரஜினி கமல் நட்பு தெரிந்தது” என்றார்.