Red sandal wood – விமர்சனம்
தொலைக்காட்சியிலும்,தினசரி நாளிதழ்களிலும் நாம் படித்து நம் மனதை மிகவும் பறிதவிக்க வைத்த ஒரு உண்மை சம்பவத்தின் கதை தான் இந்த படம்.
சென்னை வியாசர்பாடியில் வசித்துவரும் படத்தின் ஹீரோ வெற்றி காணாமல் போன தனது நண்பனை தேடி திருப்பதி செல்கிறான். அங்கே எதிர்ப்பாராத விதமாக செம்மரக்கடத்தலுக்காக பொய் குற்றம் சாட்டப்பட்டு திருப்பதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறான். அந்த காவல் நிலையத்தில் தன்னை போன்ற பல அப்பாவி தமிழர்கள் இருப்பதை பார்க்கிறான். காவல் அதிகாரி அனைத்து அப்பாவிகளையும் சுட்டுத்தள்ள திட்டம் தீட்டுகிறார்.
ஹீரோ வெற்றி நடிப்பில் முந்தைய படங்களை விட தேறி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். சோகம், ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு யதார்த்த கிராமத்து மனிதரை கண் முன் நிறுத்துகிறது. நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்கு பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் இருப்பதை இப்படம் சொல்கிறது. Red sandal wood தமிழர்களின் ரத்த சரித்திரம்.
ஹீரோ காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் அந்த காட்சியில் இருந்து படத்தின் விறுவிறுப்பு எகிற வைக்கிறது மொத்தத்தில் அநியாய நம் இன தமிழர்களுக்கு ஆந்திரா போலீஸாரால் ஏற்பட்ட கொடுமைகளை தெள்ளத் தெளிவாக காட்டியிருக்கும் படம் இந்த ரெட் சாண்டல் வுட்.