ஆதி – நிக்கி கல்ராணி திருமணத்தையொட்டி ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள்.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ஒன்றாக இணைந்து நடித்த நட்சத்திர தம்பதிகளான நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்யாணி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்களது திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தார்கள்.
தங்களது திருமணத்திற்கு பிரபல விஐபி களையும், அரசியல் பிரமுகர்களையும், நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து சரளமாக விருந்தளித்து மகிழ்ந்த இந்த தம்பதியினருக்கு ஒரு ஆசை.
அது என்னவென்றால்.
தங்களது திருமணத்தில் ஜாதி மத பேதமின்றி ஒரு ஆயிரம் பேருக்கு உணவு வழங்க வேண்டும் என்கிற தங்களது ஆசையை நிறைவேற்றினர்.

உணவு அருந்திய அனைவரும் நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும், பல்லாண்டு காலம் வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.