ரெஜினா படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியது டைம்ஸ் மியூசிக்

அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
யெல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் இடையேயான படத்தின் இசை உரிமைக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.
படத்தின் முக்கிய பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும், வந்தனா ஶ்ரீனிவாசன், சின்மயி, மாலதி, ஷாம், கல்பனா, ஹர்மோனிஸ், ப்ரியா ஹமேஷ், தீபாலி சாத்தே, பூமி திரிவேதி, பிஜேஷ் ஷந்திதியா, டாக்டர் அபர்ணா, ரம்ய நம்பீசன், வைக்கம் விஜயலக்ஷ்மி, ரிமி டோம்னி பாடியுள்ளார்கள். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
“SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்த இசையமைப்பாளர் சதீஷ் நாயர் இப்படத்திற்கு இசைமைக்கிறார். பாடல்களுக்கான வரிகளை தமிழில் யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) எழுதியுள்ளனர்.
பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார்.