இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO படத்தின் அதிரடி அப்டேட் தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாகிறது !!
தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளை தந்த முன்னணி பிரபலங்களான இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தற்போதைக்கு BoyapatiRAPO என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலகின் மிக வெற்றிகரமான பிரபலங்கள் இணையும் இத்திரைப்படம் இப்போதெ மிகப்பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தசரா திருவிழா இந்த அறிவிப்பால் மிகப்பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.