ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உழவர்களுக்கு ‘உலக நாயகன்’ ஆதரவு..!

by Tamil2daynews
June 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உழவர்களுக்கு  ‘உலக நாயகன்’ ஆதரவு..!

 

பத்திரிகைச் செய்தி பாரம்பரிய நெல் ரகங்களை மீ ட்டெடுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை நிற்பேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாம் மறந்து போன, நம்மை விட்டு மறைந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீ ட்பதில் ஒரு போராளியாகச் செயல்பட்டவர் நெல் ஜெயராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 நெல் ரகங்கள்.தனக்குப் பின்னரும் இந்தப் பேரியக்கம் தொடர்வதற்கான விதைகளை அவர் ஊன்றிச் சென்றிருக்கிறார். அதன் சாட்சியாக ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அவரது வழித்தோன்றல்களும் மாணவர்களும் ஜெயராமன் ஏற்றிய நெருப்பை அணையாமல் பாதுகாத்து வருகிறார்கள்.பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது இந்த இயக்கம்.இந்த அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை இன்று நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய திரு. கமல்ஹாசன் ‘திருகியெழுதப்பட்ட புனைவரலாற்றிலிருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பதுதான் இன்றைய அரசியல்.தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வேளாண்மைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத இடம் உண்டு.

வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீ ட்டெடுத்தே ஆகவேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன்.கைவிடப்பட்ட ஊர்க்கிணறுகளை மீ ட்டெடுக்கும் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ பற்றி சமீ பத்தில் கேள்விப்பட்டேன். உடனடியாக எனது ஆதரவையும்,பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன் என தெரிவித்தார்.

இயற்கை விவசாயம், தற்சார்புப் பொருளாதாரம், மரபு வேளாண்மை,சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டினங்கள் பரமாரிப்பு,நீர்நிலைகள் மீ ட்டெடுப்பு, கிராம மேம்பாடு உள்ளிட்டவை மக்கள் நீதி மய்யம் அக்கறை கொள்பவை. இவற்றில் எங்கள் பங்களிப்பு என்றென்றும் தொடரும்.வருகிற ஜூன் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இவர்கள் நடத்தும் ‘தேசிய நெல் திருவிழா – 2023’ நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீ து அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும். பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்கவேண்டும் என்றும் திரு.கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.இந்தச் சந்திப்பின் போது திரைப்பட இயக்குனர்கள் ஹெச். வினோத் மற்றும் இரா.சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம்,நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், உயர்மட்டக்குழுத் தலைவர் பந்தநல்லூர் அசோகன் உயர்மட்டக்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் இருபதிற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளும் திரு.கமல்ஹாசனைச் சந்தித்து உரையாடினர்.

 

 

 

Tags: kamal haasankamal haasan moviekamal haasan wifekamal hasanKamal Hassankamal hassan movieskamala hassankamala hassan movieskamalahassankamalahassan latestkamalhaasan
Previous Post

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

“நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்”, நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார்.

Next Post

"நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்", நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார்.

Popular News

  • சித்தா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பிரபலங்கள் வெளியிட்ட தீ – இவன் இசை இன்று முதல்.

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மால்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சித்தா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

September 27, 2023

“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா

September 27, 2023

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

September 27, 2023

சித்தா – விமர்சனம்

September 27, 2023

இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் பான் இந்திய வெளியீடாக நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது!

September 27, 2023

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்

September 27, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!