ரேகை – விமர்சனம்
தினகரன் இயக்கத்தில் பால ஹாசன், பவித்ரா ஜனனி, சந்தியா, வினோதினி வைத்தியநாதன், வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், இ.இந்திரஜித், எம்.ஸ்ரீராம், பூபாலம் பிரகதேஷ் ஆகிய பலர் நடித்துள்ள இணையத் தொடர் ரேகை. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் இந்த தொடர் நவம்பர் 28 ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பான புலன் விசாரணை , மர்மங்கள் என சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள தொடர் .

எந்த தடயமும் விடாமல், பிரேத பரிசோதனையைக் கூட ஏமாற்றும் வகையில் நடந்த இந்தக் கொலையின் பின்னால் யார் இருக்கிறார்கள் ? ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? அவர்களுக்கெல்லாம் ஒரே கைவிரல் ரேகை இருப்பது எப்படி? — என்பதற்கான பதில்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லும் தொடர்தான் ‘ரேகை’.
முக்கியமான பாத்திரத்தில் வினோதினி கவனம் ஈர்த்துள்ளார். பல புதிய முகங்களும் தங்களது காட்சிகளை உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ் பிரதாபின் பின்னணி இசை புலனாய்வு காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம். ஹெண்ட்ரி, பல்வேறு கோணங்களில் காட்சிகளை அமைத்து பார்வையாளர்கள் கவனத்தை சிதறவிடாமல் தக்கவைத்திருக்கிறார்.பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடரை எழுதி இயக்கிய எம். தினகரன், எதிர்பாராத திருப்பங்களும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும் கொண்ட ஒரு புதிய புலனாய்வு அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 6 எப்பிசோட்களையும் ஒரே தடவையில் பார்த்தாலும் சலிப்பில்லாத ஓட்டம். ஒவ்வொரு எப்பிசோடும் புதிய சம்பவம், அதனால் உருவாகும் மர்மம், அதை அவிழ்க்கும் நாயகனின் விசாரணை என்று தொடரை உற்சாகமாக நகர்த்தியிருக்கிறார் தினகரன். கொலை சம்பவங்களை அறிவியல் கூறுகளுடன் இணைத்தது கூடுதல் சிறப்பு. கிரைம் திரில்லர் என்றாலும், குடும்பத்துடன் கூட பார்க்க வேண்டிய தொடராக அமைத்திருக்கிறார். பல சம்பவங்களை இணைத்து ஒரு வலுவான கதையாக கட்டியமைத்த தினகரன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தத்தில், ‘ரேகை’ — அதிர்ச்சி, ஆச்சரியம், சுவாரஸ்யம் நிறைந்த ஒரு நல்ல புலனாய்வு தொடராக அமைந்துள்ளது.









