“மஹா” திரைப்படம் குறித்து ஆறு அசத்தும் தகவல்கள்..!
“மஹா” திரைப்படத்தின் சுவாரஸ்யமான சில தகவல்கள் இதோ உங்களுக்காக.
‘மஹா’, ஹன்சிகாவின் 50 வது படம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சிம்புவும் நடித்துள்ளார். இந்நிலையில் ‘மஹா’ படம் ஜு-லை 22ல் திரையரங்குகளில் வெளியாவது அனைவரும் அறிந்ததே.
ஹன்சிகாவின் 50 வது படமான மஹாவை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

மஹா ஹைலைட்ஸ்-1,
தமிழ் படங்களில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா தனது ஐம்பதாவது படத்தை தனது திரையுலக பயணத்தில் முக்கிய படமாக இருக்க வேண்டும் என்று தனது நண்பர்களிடமும் தனது உறவினர்களிடமும் தனது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அவரை தேடி வந்தது மஹா பட வாய்ப்பு.இந்த மஹா படத்தை தனது ஐம்பதாவது திரைப்படமாக நடிக்கலாமா என்று தனது தாயிடம் கேட்ட பொழுது அவரோ எந்த படத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் இந்த “மஹா”படம் தான் உனது ஐம்பதாவது படமாக இருக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட அதுவே அமைந்தது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படம் இந்த “மஹா”.
மஹா ஹைலைட்ஸ் – 2,
இத்திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் ஹீரோ ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் விருப்பப்பட ஹன்ஷிகாவோ நான் சிம்புவுடன் பேசுகிறேன் என்று சொல்லி ஒரே ஒரு போன் கால் உடனே நடிக்க சம்மதித்தார் சிலம்பரசன்.ஏனென்றால் அப்போது சிம்புவும் ஹன்சிகாவும் காதல் வலையில் விழுந்திருந்த காலகட்டம் அது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று படப்பிடிப்புக்கு போன சிம்புவுக்கு கதையின் மீது ஈடுபாடு அதிகமாக அவர் படத்தில் ஒரு 45 நிமிடங்கள் வரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது “மஹா” படத்தின் கூடுதல் சிறப்பு.

மஹா ஹைலைட்ஸ் – 3,
இந்த “மஹா” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பி.வி.ஆர் மாலில் நடைபெற்ற போது இந்த விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இப்படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டு படம் நிச்சயமாக பிரமாண்டமாக வந்திருக்கிறது என்றும் படம் நிச்சயமாக எல்லா தரப்பினர்களையும் கவரும் என்பது துளி அளவும் சந்தேகம் இல்லை என்று கூறியது படத்தின் பாதி வெற்றியை அவ்விடத்திலேயே திரையுலக ஜாம்பவான்களால் நிர்ணயத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹா ஹைலைட்ஸ் – 4,
இந்த படம் மிகப்பிரமாண்டமாக வரவேண்டும் என தயாரிப்பாளர்கள் செலவு பற்றி துளி அளவும் கவலைப்படாமல் பணத்தை வாரி இரைத்து மிக பிரம்மாண்டமான முறையில் படத்தை தயாரித்துள்ளனர். “கொரோனா” காலகட்டத்திலும் நல்ல நாள் பார்த்து இந்த படத்தை நிதானமாக ரிலீஸ் செய்ய தயாராகி விட்டனர்.இவர்களின் கடின உழைப்பும் , முயற்சிக்கும் இதோ ஜூலை 22-ல் “மஹா” உலகெங்கும் வெளியாகிறது.

மஹா ஹைலைட்ஸ் – 5,
மகா திரைப்படத்தின் விளம்பரங்களிலும் செலவைப் பற்றி துளி அளவு கூட கவலைப்படாமல் விளம்பரங்களுக்கு மிக பிரமாண்டமான முறையில் செலவிட்டு வருகின்றனர் தயாரிப்பு நிறுவனத்தினர்கள்.இது போதாது என்று சிம்புவின் ரசிகர்கள் மதுரையவே கலக்கி எடுத்து விட்டனர் .மதுரையில் முதன்முறையாக ஆயிரம் அடியில் விளம்பர ப்ளக்ஸ் பேனர் வைத்து தமிழ் திரை உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு அந்த ஆயிரம் அடி போஸ்டர் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது .இதுவே இந்த மஹா படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயித்து விட்டது என்றே சொல்லலாம் .

மஹா ஹைலைட்ஸ் – 6,
விளம்பரங்களுக்கு தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட்ட 10 செகண்ட், 15 செகண்ட் டீசர்களில் பெண்மையை போற்றும் விதமாக மஹா படத்தின் ஹன்சிகா நடித்திருக்கும் காட்சிகள் பெண்கள் மத்தியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்துகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பெண்கள் மத்தியில் அதிகம் ஆர்வம் உள்ளதாகவும் தெரிகிறது. தமிழக மக்களின்,குறிப்பாக பெண்களின் நாடித் துடிப்பை அறிந்து இந்த மஹா திரைப்படம் நிச்சயம் மெகா வெற்றி பெறும் என்பது துளி அளவும் சந்தேகம் இல்லை.படக்குழுவினர்களுக்கு எங்களின் தமிழ் 2டே நியூஸ் சார்பாகவும் சினிமா கோட்டம் சார்பாகவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்
சரண்