‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை வேடமா..?
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது தடபுடலாக தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் பான் இந்தியா படமாக கலக்க வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திரங்கள் பலரும் குழுமியுள்ள இந்த படம் சோழ வம்ச வரலாறு பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவானதாகும். பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இந்த நாவலை படமாக்க பல தலைமுறை நடிகர்கள் முயற்சித்து விட்ட நிலையில் தற்போது இதனை நனவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்தான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் நடித்துள்ள ரோலுக்கு வேறொரு நடிகையை தன் முதலில் மணிரத்தினம் ஒப்பந்தம் செய்துள்ளாராம். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐஸ்வர்யாராயின் நந்தினி கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழிவாங்கும் முகம் அழகானது என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் பழுவூர் ராணியாக இவர் நடித்துள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ரேகாவை தான் முடிவு செய்து இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மணிரத்தினம் கூறியுள்ளார்.