தீர்க்கதரிசி – விமர்சனம்
காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணி புரியும் ஸ்ரீ மனுக்கு, அடையாரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட போவதாக போன் வருகிறது. இது விளையாட்டாக யாரோ பேசுகிறார் என்று எண்ணி ஸ்ரீ மனும் மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் ஆனால் அடையாரில் இந்த பெண் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அந்த மர்ம நபர் அடுத்து நடக்கும் விபத்து, பேங்க் கொள்ளை என பல விஷயங்களை கட்டுபாட்டு அறைக்கு சொல்கிறார். பேங்க் கொள்ளை தவிர வேறு எதையும் காவல் துறையால் தடுக்க முடிய வில்லை. சிறப்பு அதிகாரி அஜ்மல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசும் மர்ம நபரை கண்டு பிடிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீடியா இந்த விஷயத்தை பெரிது படுத்த மர்ம நபரை மக்கள் தீர்க்க தரிசி என்று புகழ்கிறார்கள். இறுதியில் ஸ்ரீமன் இந்த சம்பவங்களுக்கு பின் இருக்கும் சங்கிலி தொடரை கண்டு பிடிக்கிறார். இறுதியில் தீர்க்கதரிசியின் தரிசனம் கிடைத்ததா என்பதாக படம் செல்கிறது. வித்தியாசமான கோணத்தில் ஒரு பரபரப்பான படத்தை தந்துள்ளார் டைரக்டர்கள். லக்ஷ்மன் ஒளிப்பதிவும் ரஞ்சீத் எடிட்டிங்கும் பரபரப்புக்கு துணை செய்கின்றன.உயரமான மிடுக்கான தோற்றத்தில் சரியாக பொருந்துகிறது.
ஜெய் வந்தும் துஸ்வந்தும் யதார்த்தமான காவல் துறை அதிகாரிகளாக வருகிறார்கள். ஸ்ரீமன் நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்றி ஸ்கோர் செய்கிறார். சத்யராஜ் சில காட்சிகள் வந்து செண்டிமெண்டாக நடித்துள்ளார். ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. தீர்க்கதரிசி – ஒரு மாறுபட்ட திரில்லர் தரிசனம்.