சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அவரே வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. ஒரு சில படங்களை முதல் பாகத்துடன் நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
அதுமட்டுமில்லாமல் சந்திரமுகி படம் ரஜினியின் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம். சந்திரமுகியாக ஜோதிகாவை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இதில் ஏதேனும் குளறுபடி அமைந்தால் அது ரஜினிக்கு பெரிய கெட்ட பெயரை உண்டாக்கும். இந்த ரிஸ்க்கை தேவையில்லாமல் கையில் எடுக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சந்திரமுகி 2 படத்தின் எதிர்பார்ப்பை சுத்தமாக குறைந்து விட்டது. பெரும்பாலும் சந்திரமுகி படத்தில் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகி ஆகியோருக்கு இடையில் என்ன நடந்தது, ஏன் சந்திரமுகி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டால்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் தான் இரண்டாம் பாகம் இருக்க வேண்டும்.
அதில் சந்திரமுகியாக இளம் நாயகி யாரேனும் நடித்தால் தான் சரியாக இருக்கும். ஆனால் தற்போது ஜோதிகாவை விட வயது அதிகமான சிம்ரனை நடிக்க வைத்தால் எப்படி சரியாக இருக்கும் எனவும் ஏற்கனவே முதல் பாகத்தில் சந்திரமுகி கேரக்டரில் சிம்ரன் சில காட்சிகளில் நடித்து இயக்குநர் பி.வாசுவிற்கு திருப்தி இல்லாமல் மாற்றியவருக்கு இப்பொழுது எப்படி திருப்தி வரும் என கோலிவுட் வட்டாரங்களில் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகர் , நடிகைகள் தேர்வு மிக முக்கியம் இயக்குனரே..