தனியார் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பைரவி தண்டபாணி, என்னைப் பார் யோகம் வரும் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தேவா, சபேஷ் – முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையில் பாடிய இவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து பல ஆல்பங்களுக்கு பாடியுள்ளார்.
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையையும் முறையாக பயின்ற பைரவி தண்டபாணி, அமெரிக்காவிலுள்ள டெனீஸ் மாநிலத்தின் நாஷ் வல்லி எனுமிடத்திலுள்ள “அவதூர் மியூசிக்கல்ஸ் அகாடமியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதில் பல மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார். தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், .மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற சங்கங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் மேற்கூறிய அனைத்து மொழிகளிலும் பாடி அந்தந்த சங்கங்கள் மற்றும் அந்தந்த மொழி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்து பண்டிகைகளான தீபாவளி, சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு இவரது இசை நிகழ்ச்சி என்றால் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள்.
12 மணி நேரம் பாடி சாதனை…
நடிகர்கள் நெப்போலியன்,
Y.G மகேந்திரன் கலந்து கொண்டனர்
________
மலேசியா, பாரீஸ், இந்தியா, அமெரிக்கா ,மற்றும் பல நாடுகள் கலந்து கொள்ளும் world Record Event, India Record Event எனும் போட்டிகளில் அமெரிக்கா சார்பாக தன் மாணவர்களுடன் கலந்து 12 மணி நேரத்திற்குள் தன் மாணவர்களுடன் பாடி World Record certificate என்ற விருதினை பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் Y.G மகேந்திரன் மற்றும் ஸ்ரீராம் மியூசிக்கல் அகாடமி சார்பாக ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.