வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலை அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆலோசனைகள் போய்க் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தல அஜித் அடுத்தபடியாக கே.எஸ்.ரவிக்குமார் உடன் இணைந்து நடிக்க உள்ளாராம். ஆதித்யா பிர்லா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் 1997ஆம் ஆண்டு அஜீத்துடன் சேர்ந்து பகைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது 14 வருடம் கழித்து கே.எஸ்.ரவிக்குமார் உடன் தல அஜித் இணையப் போவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்ப வரும் என்று எதிர்பார்ப்பு இருப்பதால் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்புகளை ரகசியமாக வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது ரகசியம் உடைந்துவிட்டது இணையதளத்தில் கசிந்துவிட்டது.
வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். தல அஜித் ஒரு படம் முழுமையாக முடித்த பின் தனது அடுத்த படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்ப வரும் என்பதை நாம் கணித்துக் கொள்ள வேண்டியது.