சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை முடித்துவிட்டு கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பார் என கூறப்படுகிறது.
இது ரஜினியின் 169 படமாக அதாவது தலைவர் 169 உருவாகவுள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் தலைவர் 170 படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த படத்தை ரஜினியின் தீவிர ரசிகர்… ரசிகர் என்பதை விட ரஜினி வெறியர் என்றே சொல்லலாம்.
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியிடம் லாரன்ஸ் கதையின் ஒன்லைன் கூறியதாகவும் அது ரஜினிக்கு பிடித்து போகவே முழுக்கதையை தயார் செய்து வர சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.அதன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் லாரன்ஸ்.வாழ்த்துக்கள்