• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எம். ஜி. ஆரின் 103 வது பிறந்த நாளில் அரவிந்த்சாமியின் எம். ஜி. ஆர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட “தலைவி” படக்குழு !

by Tamil2daynews
January 19, 2020
in சினிமா செய்திகள்
0
எம். ஜி. ஆரின் 103 வது பிறந்த நாளில் அரவிந்த்சாமியின் எம். ஜி. ஆர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட  “தலைவி” படக்குழு !
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் தலைவி படத்தில் எம். ஜி. ஆராக நடிக்கவுள்ள அரவிந்த்சாமியின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தலைவர் எம். ஜி. ஆரின் பிறந்த நாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அறிமுகப்படுத்துவது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியை தந்த  அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென  கருதுகிறது படக்குழு.

இயக்குநர் விஜய் கூறியதாவது…

முன்னமே சொன்னதுபோல் “தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய,  இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறுவுருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும். நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதேவிதமான லுக்கிற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக்கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார்செய்து கொண்டார். திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை  நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் என்றார்.

Vibri Motion Pictures நிறுவனம் Karma Media Entertainment நிறுவனத்துடன் இணைந்து “தலைவி” படத்தை தயாரிக்கிறார்கள். 2020 ஜூன் 26 அன்று படம் திரைக்குவரவுள்ளது.

Tags: AravindswamiMGRThalaivi
Previous Post

Actor Vijaysethupathi Birthday celebration with YOYK Unit

Next Post

அமலாபால் இனிமேல் ஹீரோ – இயக்குனர் கே.ஆர்.வினோத்

Next Post
அமலாபால் இனிமேல் ஹீரோ – இயக்குனர் கே.ஆர்.வினோத்

அமலாபால் இனிமேல் ஹீரோ - இயக்குனர் கே.ஆர்.வினோத்

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.