ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சிட்டாடல்’ இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் பிரபலங்கள்

by Tamil2daynews
April 7, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சிட்டாடல்’ இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் பிரபலங்கள்

 

உலகளவிலான துப்பறியும் இணைய தொடரான ‘சிட்டாடல்’ இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதன் போது ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் திரண்டனர்.

ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் இணைந்து  பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் துப்பறியும் திரில்லர் ஜானரிலான இணையத் தொடர் ‘சிட்டாடல்’. இந்த இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதன் போது இந்த இணைய தொடரில் நடித்த நடிகர் ரிச்சர்ட் மேடன், நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ப்ரைம் வீடியோவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வணிகப்பிரிவு தலைவரான கௌரவ் காந்தி‌, பிரைம் வீடியோவின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் ஆகியோருடன் இந்திய திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறையின் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மும்பையை தொடர்ந்து ரோம் மற்றும் லண்டன் போன்ற மாநகரங்களில் இதன் பிரத்யேக சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது. இதன் போது நடைபெறும் சிவப்பு கம்பள வரவேற்பில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

‘சிட்டாடல்” தொடரின் பெயரிடப்படாத இந்திய பதிப்பில் நடித்து வரும் நடிகர் வருண் தவான், அதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே, கதாசிரியரும், எழுத்தாளருமான சீதா ஆர். மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிட்டாடல்' இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் பிரபலங்கள் | Bollywood Celebrities at Citadel Premier - Tamil Filmibeatமேலும் இவர்களுடன் நடிகைகள் ரேகா, அதிதி ராவ் ஹயாத்ரி, ரசிகா துஹல், சானியா மல்ஹோத்ரா, ஸ்வேதா திருபாதி, சிக்கந்தர் கெர், மோஹித் ரெய்னா, அலி ஃபைசல், ரகுல் ப்ரீத் சிங், ஜிம் சர்ப், சயானி குப்தா, மினி மாத்தூர், நோரா பதேஹி, சன்னி லியோன், பத்ரலேகா, நேகா தக்தாப்யா போன்றோரும் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தொடர்ந்து கோஹ்லி, குஷா கபிலா, ஆஷிஷ் சஞ்சலானி, சோபி சௌத்ரி, அனுஷ்கா தண்டேகர், சித்தாந்த் குப்தா, நேஹா சர்மா, சாஹிப் சலீம், இஷ்வாக் சிங், குப்ரா சயீத், குர்மீத் சிங், மெஹ்ரின் பிர்ஸாதா, புவன் அரோரா, ஸ்ருதி சேத், கரண் மேத்தா ஆகியோரும் இந்த பிரத்யேக திரையிடலை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

பாலிவுட் படைப்பாளிகள் மதூர் பண்டார், கபீர் கான், சித்தார்த் ராய் கபூர், விக்ரமாதித்யா மோத்வானி, புஷ்கர்- காயத்ரி, நிகில் அத்வானி, அனுபவ் சின்ஹா, சோனாலி போஸ், தனுஜா சந்திரா, சமீர் நாயர், ஆசிஷ் கபாடியா, ஜே. டி. மஜிடியா உள்ளிட்ட பல படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் இந்த பிரத்தியேக திரையிடல் விழாவில் கலந்து கொண்டனர்.

‘வசீகரமான கதைக்களம்.. எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள்.. வியப்பூட்டும் ரகசிய நடவடிக்கைகள்.. துப்பறிவதில் வித்தியாசம். விசுவாசம்.. என ஏராளமான பார்வையாளர்கள் விரும்பக்கூடிய விசயங்கள் நிரம்பியதாக சிட்டாடல் இணைய தொடர் இருக்கிறது’ என இந்தத் தொடரைப் பாராட்டினர்.

சிட்டாடல் இணைய தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என.. மே 26 ஆம் தேதி வரை வெளியாகவிருக்கிறது. இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே, ஆஷ்லே கம்மிங்ஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

ரூஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல்  தயாரிக்கப்படுகிறது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோருடன், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் இந்த பரபரப்பான உளவுத் தொடர், பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஏப்ரல் 28 முதலிரண்டு அத்தியாயங்கள் மற்றும் மே 26 வரை வாரந்தோறும் ஒரு புதிய அத்தியாயம் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.
சிட்டாடல்' இணையத் தொடரின் பிரத்யேக காட்சியைக் காண திரண்ட பாலிவுட் பிரபலங்கள் - nba 24x7 - செய்திகள் | தேசிய செய்திகள் | விளையாட்டு | மாநிலம் ... சிட்டாடல் பற்றி…
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும்  குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர். ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனத்திற்காக ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, ஏஞ்சலா ரூசோ, ஓட் ஸ்டாட், ஸ்காட் நெம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டேவிட் வெயில் ஷோ ரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஜோஷ் அப்பீல்பாம், ஆன்ட்ரெ நெமக், ஜெஃப் பிங்க்னர், ஸ்காட் ரோஸன்பர்க் ஆகியோர் இணைந்து மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுடன் நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோர்களும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள்.

ரிச்சர்ட் மேடன் மேசன் கேனாகவும், பிரியங்கா சோப்ரா ஜோனாஸுடன் நதியா சிங்காகவும், ஸ்டான்லி டுசி பெர்னார்ட் ஓர்லிக்காகவும், லெஸ்லி மான்வில்லே டாலியா ஆர்ச்சராகவும், ஓஸி இகிலே கார்ட்டர் ஸ்பென்ஸாகவும், ஆஷ்லே கம்மிங்ஸ் அப்பி கன்ராய்யாகவும், ரோலண்ட் முல்லர் ஆண்டர்ஸ் சில்ஜின், டேவிலோக் சில்ஜே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது. ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு தனித்துவமான உலகளாவிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிக்கும் தொடர்களாக தயாராகி வருகிறது.

Previous Post

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது

Next Post

‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது

Next Post

'வீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது

Popular News

  • ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    ‘பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையம் கொண்டு பிரமாண்ட ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

“ரஜினி படத்தை பார்த்த பின்புதான் நடிகையாக ஆசைப் பட்டேன்..”

June 8, 2023

LIGHT HOUSE MEDIA நிறுவனம், SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் ‘முகை’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

June 8, 2023

டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!

June 8, 2023

விருதுகளை அள்ளிய விக்ரம் சுகுமாரனின் ‘இராவணகோட்டம்’..!

June 8, 2023

படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய ‘ஃ’ பட ஹீரோவும் இயக்குநரும்

June 8, 2023

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

June 8, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!