ஜி.வி.பிரகாஷ் எனது கணவர் என்பதை விட நல்ல நண்பர்.. பாடகி சைந்தவி!
வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.


அழகி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒளியிலே பாடலை லைட் இல்லாமல் எடுத்திருப்பார்கள். சொல்ல மறந்த கதை படம் வந்த போது யார் இந்த இயக்குநர் என்று கேட்டு அறிந்து கொண்டேன்.
கள்வன் என்ற ஒரு படத்திற்காக நானும் பாரதிராஜா சாரும் சத்தியமங்கலம் பகுதியில் படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருக்கும்போது, இந்த படத்தின் கதையை தங்கர் பச்சான் கூறினார். ஏற்கனவே, பாரதிராஜா சார் மற்றும் யோகிபாபு இக் கதையை சொல்லி இருந்தார்கள்..பிடித்திருந்ததா ல் ஒப்புக் கொண்டேன். அதேபோல், கமர்ஷியல் படங்கள் மட்டும் அல்லாமல், இதுபோன்ற உணர்வுபூர்வமாகவும் இசையமைக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன்..என்றார்.