குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் ‘தும்பா’ வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் YouTubeல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, “இதைப் பற்றி நான் என்ன சொல்றது?, இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எப்போதும் விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மொத்த குழுவுக்கும் இருந்தது.
அதனால் தான் மேற்கு நாடுகளில் இந்த காட்சிகள் மாதக்கணக்கில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. எனினும், எங்கள் தும்பாவிற்கு இந்த வகையான வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை, நாங்கள் இப்போது குழந்தையின் மகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறோம்.
புதிய அணியை உள்ளடக்கிய ஒரு படம் இதுபோன்ற வரவேற்பை பெறும் என்று நாங்கள் நினைத்ததில்லை. இந்த படைப்பு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்த என் சகோதரர் அனிருத்துக்கு நன்றி. இந்த வீடியோவின் ஒரு பகுதியாக இருக்க அவர் எந்த யோசனையும் இன்றி ஒப்புக் கொண்டார்” என்றார்.
தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இளம் மற்றும் சென்சேஷனல் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள்.
எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி போன்ற திரைப்படங்களில் துரை செந்தில் குமாரிடம் பணிபுரிந்த ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். இளம் நாயகன் தர்ஷன், தீபா மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஆக்ஷன் 100 சண்டைப்பயிற்சியையும், வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங் ஆகியோர் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள். ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர். வசனம் எழுதியுள்ளனர்.
Knack ஸ்டுடியோஸ் வில்லவன் கோதை ஜி (வி.எஃப்.எக்ஸ் கிரியேட்டிவ் டைரக்டர்), ஸ்ரீ ரங்கராஜ் ஜே (வி.எஃப்.எக்ஸ் இயக்குநர்) மற்றும் சந்திரமோகன் ஜே (வி.எஃப்.எக்ஸ் தயாரிப்பாளர்) ஆகியோர் இப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இது குடும்பம் & குழந்தைகளை மையப்படுத்திய படம். 2019 கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
சுரேகா நியாபதியின் ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.