தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் எம்.தேவராஜுலு வழங்கும், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!
திறமையான குழுவின் பணி, பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் படத்தின் கதையை வடிவமைக்கும் ஒரு நிலையான செயல்முறை ஆகியவைதான் ஒரு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கிறது. இது ‘டீசல்’ படத்தில் நடந்துள்ளது. தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் எம். தேவராஜுலு தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தீபாவளி வாழ்த்துக்களுடன் படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பைக் காட்டும் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 75+ இடங்களில் 5000+ ஆட்களைக் கொண்டு 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாணின் கேரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில், வர்த்தக வட்டாரத்திலும் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஹரிஷ் கல்யாணின் கேரியரில் முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்தே ’டீசல்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சிறப்பு வீடியோ முழு குழுவினரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உள்ளது. ஆடியோ, டிரெய்லர் மற்றும் டீசர் வெளியீட்டு அறிவிப்புகளுடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் தெரிவிக்கும்.’டீசல்’ படத்தில் இருந்து வெளியான ‘பீர் சாங்’ பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் வசீகரிக்கும் டியூன்கள் மற்றும் பாடல்களால் பலதரப்பினரின் ஆர்வத்தையும் கவர்ந்தது. ’டீசல்’ படத்தில் அதுல்யா ரவி, பி. சாய்குமார், எஸ் கருணாஸ், வினய் ராய், அன்னயா, ஜாகீர் உசேன், சச்சின் கெடேகர், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, என், தீனா (தினேஷ்), தங்கதுரை கே, லட்சுமி சங்கர், எஸ். தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். எஸ், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:
பேனர்: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்,
தயாரிப்பாளர்: எம். தேவராஜுலு,
எழுதி இயக்கியவர்: சண்முகம் முத்துசாமி,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ். பிரபு,
எடிட்டிங்: சான் லோகேஷ்,
கலை இயக்குநர்: ரெம்பன்,
ஸ்டண்ட் டைரக்டர்: செல்வா மற்றும் ராஜசேகர்,
நடன இயக்குனர்: ராஜு சுந்தரம், ஷோபி, ஷெரீப்,
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா,
வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,
தயாரிப்பு: எஸ்பி சினிமாஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்