இந்த முறை ஆஸ்கரை வெல்ல வேண்டும். புதுமைப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.
இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் புதிய படம் இரவின் நிழல் . ஒரேஷாட்டில் முழுபடமும் உருவாகியிருக்கிறது. இதில் 350 பேர் பணியாற்றி உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் இப்படத்தின் சிங்கில் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜூன் மாதம் இரவின் நிழல் படத்தின் ஆடியோ வெளியீடு ஏ.ஆர் ரஹ்மானுக்கான பாராட்டு விழாவாக. பார்த்திபன் நடத்தினார்.
சென்னை தரமணியில் உள்ள ஐ ஐ டி கலை அரங்கில் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் விழா அரங்கிற்கு வந்தபோது அவர் அரங்கில் நுழைந்தவுடன் ரோஜா மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து ரஹ்மானுக்கு இசை மழை பொழிந்து பாராட்டு மழையில் நனைய வைத்தனர்.
டிரம்ஸ் சிவமணி, வீணை வைத்யா இருவரும் இணைந்து இசையை அருவியாக கொட்டினர். தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ஹைனா, ஜேம்ஸ் வசந்தன், எஸ்.பி.பி.சரண், பாடகி ஸ்வேதா உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடந்தது
பட தயாரிப்பாளரும், இரவின் நிழல் படத்தை உலக மெங்கும் வெளியிடுபவரு மான கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சரத்குமார். இயக்குனர் கே.எஸ்.ரவி குமார், ஆர்.கே.செல்வமணி, நடிகை ராதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்தி பேசினார்கள். அப்போது,”பார்த்தின் எதிலும் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்பவர். கடந்த படமான ஒத்தசெருப்பு அவர் ஒருவர் மட்டுமே நடித்து வெளியாகி உலக அளவில் பேடப்பட்டது. தற்போது உலக அளவில் இதுவரை யாரும் செய்திராத முயற்சியாக 90 நிமிடத்துக்கு மேல் ஓடக்கூடிய. இரவின் நிழல் என்ற முழுநீள படத்தை ஒரேஷாட்டில் இயக்கி நடித்திருக்கிறார். இதுவொரு டார்க் ஃபிலிமாக உருவாகியிருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்துக்கு இசை அமைத்திருப்பதன் மூலம் இது உலக அளவிளான படமாகி யிருக்கிறது. ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத்தந்து இந்தியா வுக்கு பெருமை சேர்த்திருக்கிறார ரஹ்மான். இரவின் நிழல் மூலம் மீண்டும் ஆஸ்கர் விருதை சாத்தியமாக்குவார் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் இப்படம் ஆஸ்கர் கதவை தட்டும்” என்று பாராட்டினார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திபன் தன் படத்துக்கு இசை அமைக்க என்னிடம் கதை சொல்லி இருக்கிறார். அந்த சூழல் இரவின் நிழல் படம் மூலம் அமைந்திருக் கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்து கிறேன்” என்றார்.
இரவின் நிழல் படத்தின் பாடல்களை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியிட்டார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த பார்த்திபன், “இரவின் நிழல் வெறும் படமாக தொடங்கப்பட்டது. இப்படத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் வந்த பிறகு உலக அளவிலான படமாக மாறியிருக்கிறது. இப்படத்திற்காக 350 பேர் கடுமையான. உழைப்பை வழங்கிய. இருக்கின்றனர்” என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ மூலம் தோன்றி படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சியை பார்த்து வியந்து இந்த புதுமைப்பித்தனின் இந்த “இரவின் நிழல்” இன்னும் பல சாதனைகள் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று பாராட்டியது அனைவரையும் வியக்க வைத்தது.
தன்னம்பிக்கை இருந்தால் போதும் தரணி எங்கும் ஆளலாம் என்ற ஒரு சொல்லுக்கு இந்த புதுமைப் பித்தன் பார்த்திபனின்