கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேல் தமிழ்சினிமாவில் காமெடியனாக நடித்து வருபவர் நடிகர் விவேக். மற்றவர்களைப் போல் அல்லாமல் தன்னுடைய காமெடி வாயிலாக மக்களை சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும் தனித்துவமான கலைஞன்.
தற்போது வரை அவருக்கு அந்த மவுசு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளிவந்த தாராளப் பிரபு படத்தில் கூட அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் விவேக் பேட்டி அளிக்கும் போது, தனக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் இடையிலுள்ள பிரச்சினை ஒன்றை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து ரகசியத்தை உடைத்துள்ளார்.
விவேக்கும் வடிவேலுவும் கிட்டத்தட்ட ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக காமெடியன்கள் ஆக நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையில் வரும் காமெடிகள் அந்த காலத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. விரலுக்கேத்த வீக்கம், மிடில் கிளாஸ் மாதவன், பொங்கலோ பொங்கல் போன்ற படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றும் இந்த படங்களை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வருகிறது என்பதுதான் ஆச்சரியம். இதைத்தான் இன்றைய காமெடியன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நண்பர்களாக இருந்தபோது ஒரு மேடையில் விவேக்கும் வடிவேலுவும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சி செய்தனர்.
அதில் விவேக்கை விட வடிவேலு நன்றாக செய்து விட்டார் போல. நண்பர் என்ற உரிமையில் விவேக் எதார்த்தமாக, என்ன விட நல்லா பேசுறியே, நைட்டே சீன் பேப்பர் வாங்கி படிச்சிட்டியா என கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு மனதில் தோன்றியதை சொன்னேன் எனக்கூறி சங்கடப்பட்டாராம்.
அதிலிருந்துதான் இருவருக்குள்ளும் பிளவு ஏற்பட்டதாகவும், இருந்தும் எனக்கும் அவருக்கும் தற்போதுவரை நல்ல நட்புள்ளது எனவும் விவேக் கூறினார். மேலும் நிறைய நிகழ்ச்சிகளில் நான் வடிவேலுவை பற்றிக் கூறியிருக்கிறேன், ஆனால் வடிவேலு என்னை பற்றி பேசுவதை தவிர்த்து விட்டார் என கவலையாக பதிலளித்துள்ளார் விவேக்.