‘துரிதம்’ – விமர்சனம்
ஜெகன், ஈடன் நடிப்பில் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் துரிதம் .
எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார்.
கதைக்கான ஹீரோவாக ஜொலித்திருக்கிறார் ஜெகன். நீண்ட வசனம், கிடைக்காத காதலுக்கான ஏக்கம், ஆக்ஷன் என எல்லா இடத்திலும் இறங்கி அடித்திருக்கிறார்.
உடல்மொழியும் ஜெகனுக்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. ஜெகனுக்கும் பாலசரவணனுக்குமான காமெடி காட்சிகள் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

எமோஷன் காட்சிகளில் நன்றாகவே நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்படியுமா ஒரு தந்தை இருப்பார் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ். தனது சீனியர் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தந்தையான வெங்கடேசிடம் நாயகி ஈடன் சிக்கி விடுவாரோ என்ற ஒரு படபடப்பை கொண்டு வந்து காட்சியை விறுவிறுப்பாக்கி வைத்துவிட்டார் இயக்குனர்.
கிராமத்தில் நடக்கும் ஜாதி மோதல், சிட்டியில் நடக்கும் காதல் இரண்டையும் பைபாஸ் ரோட்டில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
வாசன் & அன்பு டென்னிஸின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
இருவரும் பைக்கில் செல்லும் காட்சி, வேனில் பின்னால் இருவரும் அமர்ந்திருந்த காட்சி, பைக் & ஆட்டோ சந்தித்து கொள்ளும் காட்சி என பேவரைட் ஒளிப்பதிவை கச்சிதமாகவே கொடுத்திருக்கின்றனர்.
நரேஷின் பின்னணி இசை பரபரக்க வைத்த கதையின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமாவுல எவ்வளவோ படங்கள் வந்தாலும் இது மாதிரி படங்கள் அப்பப்ப வருவதில்லை எப்போதாவது ஒருமுறை தான் வருகின்றது.
ஏனென்றால் இந்த படம் பார்ப்பதற்கு அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கின்றது.
மொத்தத்தில் இந்த ‘துரிதம்’ படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.